வாராகி திருக்கண் இயல்
வகுப்பு
தனதனன தந்த தத்த தனதனன தந்த தத்த
தனதனன தந்த தத்த தானனா
தனதனன தந்த தத்த தானனா
விதியெனநி னைந்து நித்தம் மிகமனமு ழன்றி ருக்கும்
வினைகெட நிமிர்ந்தி ருக்க லாகுமே
விதவித நலங்கள் மெச்சும் விருதுகள் வளங்கள் பெற்று
மிகவிசைகள் வந்து மொய்த்து மீறுமே!
பதவிகளி தம்கொ டுக்கும் பலர்புகழ்ந லங்கள் கிட்டும்
பயனுறவ ளங்கொ ழித்து மேவுமே
பழிவருமி டங்கள் பொத்தி இசைபெறுமி டந்தி றக்க
பளபளவி தம்சி றக்க லாகுமே
வினைகெட நிமிர்ந்தி ருக்க லாகுமே
விதவித நலங்கள் மெச்சும் விருதுகள் வளங்கள் பெற்று
மிகவிசைகள் வந்து மொய்த்து மீறுமே!
பதவிகளி தம்கொ டுக்கும் பலர்புகழ்ந லங்கள் கிட்டும்
பயனுறவ ளங்கொ ழித்து மேவுமே
பழிவருமி டங்கள் பொத்தி இசைபெறுமி டந்தி றக்க
பளபளவி தம்சி றக்க லாகுமே
கதிகலங்கி நைந்தி ருக்க எதிரிபலம் நைந்து பொக்க
கதியடைந்து வென்றி ருக்க வேலுமே!
கரிவனம்பு குந்து மெத்த நெடுவழிந டந்திருட்டில்
கடிபயம்தொ லைந்தி ருத்தல் சாலுமே!
எதிர்வரும் எமன்ப டைக்கு நலிகிறப யந்து ரத்தி
எவனெனமு னைந்து வெற்றி பேசலாம்
இவைதவி ரவும்ப லத்த இனியவைக ளும்கி டைக்கும்
இதைமனம்கொ ளும்பெ ருத்த பாருளீர்
பதமடர்ந் துதைந்து சுற்றி
படைகடந்து முந்து சக்திகதியடைந்து வென்றி ருக்க வேலுமே!
கரிவனம்பு குந்து மெத்த நெடுவழிந டந்திருட்டில்
கடிபயம்தொ லைந்தி ருத்தல் சாலுமே!
எதிர்வரும் எமன்ப டைக்கு நலிகிறப யந்து ரத்தி
எவனெனமு னைந்து வெற்றி பேசலாம்
இவைதவி ரவும்ப லத்த இனியவைக ளும்கி டைக்கும்
இதைமனம்கொ ளும்பெ ருத்த பாருளீர்
பகைவரை ந டுங்க வைத்த நாரியாள்
பதம்நினையு மன்ப ருக்கு சகலநன்மை தந்து நித்தம்
பயன்தருநி மிர்ந்த சக்தி நேரியாள்
அதமளிவெம் பன்றி தெத்து வளைநெடுமுன் தந்த ரெட்டை
அழகியமு கம்ப டைத்த மேனியாள்
அகிலமெங்கும் சென்று சுற்றி அடுதிறலில் முந்து சக்தி
அனலெனப் பொழிந்து வெற்றி கூடினாள்
மிதம்கடந்த வன்வி சுக்கி ரனின்தலையை முன்சி தைத்தே
வெகுசினமி குந்தி ருக்கும் மோழலாள்
மிகமகிழ்ந்து பஞ்ச மிக்கு விரிபெருமை தந்த சக்தி
மிகுமெழுவர் பெண்டி ருக்கு ளைந்தினாள்
இதம்கனிய அன்ப ருக்கு மிகவெளிய ளென்ன முற்றும்
இனியளென வந்தி ருக்கும் கோதையாள்
எழிலையும் வரந்தி ருக்கை அருளையும் அருந்தி ருக்கண்
இயலையும் நினைந்தி ருக்க வாருமே!
