Sunday, May 12, 2019

வாராகி இரத பந்தம்


வாராகி  இரத பந்தம்      
          
இரத பந்தத்திற் கான பாடல்கள்

சக்கரங் களுக்கான இன்னிசை வெண்பா
வாதாயே  நின்னடிக்கீழ் புன்தலையே வைத்திருப்பேன்
மாதாவென் தேவையே தாவாயே தாள்பணியு
மென்பா லருளைத்தா தாராள மாகவே
 
நின்னருளைத் தாதாயே வா!
மேல்பகுதிக்கான பல விகற்ப இன்னிசை வெண்பா
வாதாயே நீ வந்தால் நான்மிகவா யென்னம்மே
வாராகி என்னுள் புகுந்தபரா
  சத்தியம்மே
ஆதர வாய்வேண் டுவேனுனை யேதாயே
போத மமைகிற தெம் பு
பிரித்து
வாதாயே நீ வந்தால் நான்மிகவாய் என்னம்மே
வாராகி என்னுள் புகுந்த பராசக்தி யம்மே
ஆதரவாய் வேண்டுவேன் உனையே தாயே
போதம் அமைகிற தெம்பு
வாராகி இரத பந்தம்
அம்மையே வாராகி வா தாயே வா

No comments:

Post a Comment