Tuesday, May 14, 2019

கேட்பது கிடைப்பதில்லை


கேட்பது கிடைப்பதில்லை

கேட்பது கிடைப்பதில்லை- நான்
கிடைப்பதைக் கேட்பதில்லை
கேட்பதைப் பெற வேண்டும் - கேட்டுக்
கிடைத்ததில் ஜெயம் வேண்டும்

கேட்பதுதானே என்தொழிலாம்- அதைக்
கேடறச் செய்வதோ உன்கடனாம்
கேட்பதைக் கொடு தாயே - நல்ல
கீர்த்திகள் தருவாயே

எத்தனை இடர்கள் பாதையிலே - அம்மா
எத்தனை வலைகள் வீதியிலே
பக்தனை அறிவாயே-அருள்
பாலிக்க வருவாயே

என்குறை நீயருவாய் - அதை
எண்ணியே நலம்தர நீவிரைவாய்
அன்னையே கருமாரி- எனை
ஆகொளும் அருள் மாரி

No comments:

Post a Comment