நியூஜெர்சி எடிசன் அருகில் உள்ள சாயிபாபா
கோயிலில் மஹாருத்ரத்தோடு சிவராத்ரி அபிஹிஷேகம் நடந்த இரவு 10 மணியிலிருந்து காலை 4-30 மணி வரை அங்கிருந்தேன். அங்கே நிகழ்ந்த அனுபவம்
சிவராத்திரி
அமெரிக் காவில் நியூஜெர்சி
அதனில் பாபா திருக்கோவில்
இமயக் கயிலை, சமதளத்திற்(கு)
இறங்கி வந்த ஓர்தோற்றம்
அமைந்தி ருக்க இரவினிலே
அழகாய் வேத கோஷங்கள்
நமக்குத் தூக்கம் வாராமல்
நாத உலகில் நாட்டியது.
சாயி பாபா திருக்கோவில்
தன்னில் சிவராத் திரிநாளில்
தூய பக்திச் சிறப்போடு
சொன்னார் ருத்ரம் நூற்றொன்று
நேய மோடே அவ்விடத்தே
நிறைந்த கூட்டத் தனைவருமே
ஆய பொருள்கள் பலகொண்டே
அபிடே கங்கள் செய்தார்கள்
அடடா என்னே ஆனந்தம்
அரனே, உன்மேல் பாலெடுத்து
விடடா என்றே சொன்னார்கள்
விட்டேன், உன்னைக் கரங்கொண்டு
தொடடா என்றார், நான் தொட்டேன்
தூங்கா திருந்தே அரனையுன்னுள்
நடடா என்றார், நான் நட்டேன்
நன்றாய் என்னுள் வளர்வாயே!
No comments:
Post a Comment