Saturday, May 11, 2019

நான்கு துணை


நான்கு துணை

கணபதி

அய்யா கணபதி, ஆனந்த வாரிதி
பொய்யா நலன்தரும் புண்ணியா - மெய்யே
உனக்குள்ளே நின்றிவ் உலகாளும் ,போற்றும்
எனக்குள்ளே என்றும் இரு.

கலைமகள்

அம்மா, எனையேன் அறவே மறன்துவிட்டாய்
சும்மா ஒரு சாக்குச் சொல்லாதே -இம்மா
புவனத்தில் ஞானம் புரிகின்ற வாணி
கவனத்தை என்பாலும் காட்டு.

பராசக்தி

ஓடுகிற பிள்ளைக் குணவூட்டத் தானாகத்
தேடி வருகின்ற தேவியே - நாடுகிற
எல்லாம் நலமாய் இருக்க எனதுநாச்
சொல்லாக வந்து சுடர்.

திருமகள்

செல்வத் திருமகளே, தேவி அருள்புரிக
பல்வகையும் செல்வங்கள் பாலிக்க - நல்வகையாய்
இவ்வுலகில் வாழ எமக்கருள்க உன்னருளால்
எவ்விதமும் வாழ்வில் இனிது.


No comments:

Post a Comment