Sunday, May 12, 2019

வாராகி நடுவெழுத்தலங்காரம்


 வாராகி  நடுவெழுத்தலங்காரம்
பல விகற்ப நேரிசை வெண்பா
 நதிமீன் மணம்மீன்தாய் மன்மதன் நன்றே
பதியூறு காய்படையில் வாழ்க்கை- துதிசெய்
பனிவல்லல் கல்லமை கான்நமை மாடு
பசுவிமை என்றே பகர்.

சொல்      பிரதி          நடு   முதல் கடை

நதி       பவானி         வா      பனி
மீன்      வரால்           ரா      வல்
மணம்    அகில்           கி      அல்
மீன்       கயல்                 கல்
தாய்      அம்மை         ம்      அமை
மன்மதன் காமன்                 கான்
நன்றே    நன்மை         .ன்      நமை
ஊறுகாய்  மாவடு                மாடு
படை     பரசு                    பசு
இல்வாழ்க்கை  இம்மை     ம்      இமை

வாராகியம்மன் வரம்
இன்னொரு வகை
 நதிமீன் மணம் மீன் தாய்  மன்மதன் நன்றே
பதியூறு காய்படையில் வாழ்க்கை – துதிசெய்தே
ஆராய்ந்து மத்தி யமையப் பெறுவோமே
வாராகி யம்மன் வரம்
(அடுத்தடுத்து வரும் சொற்களின் பொருளில் நடுவெழுத்துகளைத் தொகுக்க வரும் சொற்றொடர் நடுவெழுத்தலங்காரம். எ.கா  நதி – பவானி என்பது ஒரு நதி  அதன் நடுவெழுத்து வா. இப்படி மற்றச் சொற்களின் பொருளின் நடுவெழுத்தைத் தொகுத்தால் (வாராகி அம்மன் வரம்) என்று வரும் .
முதல் வெண்பாவில் நடுவெழுத்தை எடுத்து விட்டால் விஞ்சும் சொற்கள் என்னென்ன என்பதை மூன்றாவது நான்காவது அடிகளில் காணலாம்

இரண்டாவது வெண்பா ஆராய்ந்து மத்தி யெழுத்துகளைச் சேர்த்தால்வாராகி யம்மன் வரம்என்று வரும் என்று சொல்கிறது




No comments:

Post a Comment