வாராகி சரண சிருங்க ரஹித வெண்பா
கால், கொம்பில்லா ஸ்துதி
நடராஜப்பெருமானைச்
சுற்றியிருக்கும் நந்திக்குக் கொம்பு விசேஷம், வியாக்ரபாதருக்கும் ப்ருங்கிக்கும் கால் விசேஷம்.
நான்காமவர் பதஞ்சலி பாம்பின் உருவாகையால் காலும் இல்லை கொம்பும் இல்லை. நந்தி கொம்பே அதிகம் வரும்
ச்ருங்க (கொம்பு) ஸ்துதி செய்தார். மற்ற இருவரும் கால் (துணைக்கால்) அதிகம் வரும்
சரண ஸ்துதி செய்தார்கள். பதஞ்சலி கால், கொம்பில்லா தனது பெருமையைக் கூறி சரண ஸ்ருங்க ரஹித ஸ்துதி செய்தார். ரஹிதா
என்றால் இல்லாத என்று பொருள். இந்தக் கொம்பு
கால் அமைப்பில் சமஸ்கிருத்திற்கும் தமிழுக்கும் வேறுபாடு உண்டு. தமிழில்
உயிரெழுத்துகளில் கொம்புமில்லை காலுமில்லை. ஒற்றைக் கொம்பும் இரட்டைக்
கொம்பும் எழுத்துகளின் தலைமேல் வளைந்த
கொம்புகளும்(கி, தி, தீ போன்றவை கொம்பெழுத்துகள்தாம். சிலர் கி, தி,
கீ போன்றவற்றைக் கொம்பெழுத்துகளாகக் கருதுவதில்லை. இங்கே அதிகால்,
அதிகொம்பு , காலும் கொம்பும் இல்லாத
ஸ்துதிகளுக்கு நான் எழுதிய பாடல்களைத் தருகிறேன்.
1 ஸ்ரீ வாராகி சரண துதி(அதிகால்
துதி).
நேரிசை
வெண்பா.
ஒவ்வொரு
சீருக்கும் குறைந்த பட்சம் ஒரு கால் வரவேண்டும்
ஏராளம்
தாராளோ? தாராளம்
தாராளோ
வாராவோ, சேராவோ வாகாக? – தீராது
சீராகத் தாவென்றே செப்பத்தான் வேண்டுவதோ
வாராகி தாவாயேன்? வா!
வாராவோ, சேராவோ வாகாக? – தீராது
சீராகத் தாவென்றே செப்பத்தான் வேண்டுவதோ
வாராகி தாவாயேன்? வா!
(தாவாயேன்
– தாவா ஏன்,? தாவாயேன்
ஸ்ரீவாராகி கொம்பு வெண்பா
ஒவ்வொரு
சீருக்கும் குறைந்தது ஒரு கொம்பு வேண்டும்( கொ, கோ, கி, கீ போல)
கொடுப்பாள், கொடுமையின்
கொட்டம் பொடிப்பாள்
தொடுப்பாள், நலம்செய் தொழில்கள் – திடமெடு
தேக வடிவொடு தெளிவாகச் சொற்களை
வேகம் கொடுத்திடுவா ளே!
தொடுப்பாள், நலம்செய் தொழில்கள் – திடமெடு
தேக வடிவொடு தெளிவாகச் சொற்களை
வேகம் கொடுத்திடுவா ளே!
ஸ்ரீ வாராகி சரண ச்ருங்க ரஹித
ஸ்துதி
கால், கொம்பில்லா வெண்பா
இணக்க
உளமுடன் எண்ணத்துச் சுத்த
மணமுற அன்பு மலரக் – கணங்கள்
முழுதும் அவளகத் துள்வர உன்னுள்
வழுத்தத் தருவள் வரம்.
மணமுற அன்பு மலரக் – கணங்கள்
முழுதும் அவளகத் துள்வர உன்னுள்
வழுத்தத் தருவள் வரம்.
இ
என்பது கொம்பில்லை
No comments:
Post a Comment