Sunday, May 12, 2019

கிரிசக்ர ரத விருத்தம்


கிரிசக்ர ரத விருத்தம்

எங்கெங்கு நோக்கினும் அங்கங்குத் தோன்றிடும்
     எதிரியைத் திணறடிக்கும்
      எவ்வள வாயினும் அவ்வள வாம்தொலை
      வெண்ணுமுனே  சென்றிடும்
அங்கங்கள் மீதினும் ஆகாயம் மீதினும்
      அஞ்சாமல் தான்நடக்கும்
      அட்டகா சம்செயும் ஆரவா ரம்செயும்
      ஆங்காரத் தோற்றம் கொளும்
பங்கங்கள் இல்லாமல் வெங்கோபம் கொண்டதாய்ப்
     பாய்ந்தெங்கும் தானோடிடும்
      பரிகளும் எதிர்வரும் கரிகளும் நடுங்கிடப்
      பம்பர மாய்ச் சுழற்றும்
கங்கங்கு சுற்றுதோ காற்றங்கு சுழலுதோ
      காலனோ என்றஞ்சிடக்
      கருதரிய வாராகி கிரிசக்க ரம்மம்மை
      கண்ணசைப் பில் ஓடுமே!



No comments:

Post a Comment