வாராகி
ஆற்றுப்படை
ஏராள வாதங்கள் எளிதாக வெல்கிறாய்
எப்படி இது சாத்தியம்
எங்குநீ கற்றனை தர்க்கசாத் திரங்களை
என்றெனைக் கேட்கும் நண்பா
வாராகி பக்தர்கள் வாதத்தில் வெல்வது
வழக்கமே புதியதிலையே!
வாராகி தந்ததோர் பிச்சைதான் நானிங்கு
வாதத்தில் வெல்லுகின்றேன்
நேராக நீதஞ்சைப் பெரிய கோயில் செல்க
நீள்வளா கந்தன்னிலே
நேசமாய் நல்லருள் செய்திடும் வாராகி
நேர்சன்ன திசெல்லுக
தாராள மாகவே ஜபதபம் செய்தபின்
தாயினை நீ வேண்டுக
சாதனை யாய்நீயும் வாதிலே வெல்லலாம்
சந்தேகம் இதிலில்லையே!
எப்படி இது சாத்தியம்
எங்குநீ கற்றனை தர்க்கசாத் திரங்களை
என்றெனைக் கேட்கும் நண்பா
வாராகி பக்தர்கள் வாதத்தில் வெல்வது
வழக்கமே புதியதிலையே!
வாராகி தந்ததோர் பிச்சைதான் நானிங்கு
வாதத்தில் வெல்லுகின்றேன்
நேராக நீதஞ்சைப் பெரிய கோயில் செல்க
நீள்வளா கந்தன்னிலே
நேசமாய் நல்லருள் செய்திடும் வாராகி
நேர்சன்ன திசெல்லுக
தாராள மாகவே ஜபதபம் செய்தபின்
தாயினை நீ வேண்டுக
சாதனை யாய்நீயும் வாதிலே வெல்லலாம்
சந்தேகம் இதிலில்லையே!
No comments:
Post a Comment