Sunday, May 12, 2019

வாராகி வரவு


வாராகி வரவு
ஆடிவரா வாராகி
ஆயுதங்கள் கையெடுத்துத்

தேடிவந்த நமக்கெல்லாம்
தெரிசனம் கொடுப்பதற்கு  - ஆடிவரா

கரத்தினிலே பேருலக்கை இன்னொருகை யில்கலப்பை
கதையெடுத்து வாளெடுத்து வில்லெடுத்து வருகிறா
கிரிசக்ர ரதமேறி கிடுகிடுக்க வருகிறா
கிர்ரென்று சக்கரத்தைச் சுழலவிட்டு வருகிறா    
 ஆடிவரா வாராகி
ஆயுதங்கள் கையெடுத்துத்

தேடிவந்த நமக்கெல்லாம்
தெரிசனம் கொடுப்பதற்கு  - ஆடிவரா

கண்களிலே செம்மையொளி கால்களிலே சதங்கையொலி
கால்தூக்கித் தரையுதைத்துக் கண்டவர்கள் நடுநடுங்க
விண்ணதிர வெற்பதிர விரிகடலும் தானதிர
வேகவேக வேகமாக வீரக்குதி போட்டுக்கொண்டு
ஆடிவரா வாராகி
ஆயுதங்கள் கையெடுத்துத்

தேடிவந்த நமக்கெல்லாம்
தெரிசனம் கொடுப்பதற்கு  - ஆடிவரா
 

அம்மையவள்  வருகையிலே அஞ்சாமல் பார்க்கவேண்டும்
அமர்க்களத்துக் காட்சிகளை அடியவர்க்குக்
காட்டுகிறா
பொம்மைகளாய் அண்டங்களைப் பூப்பந்தாய் எடுத்தாடி
பொல்லாத மகிஷத்தின் மேலேறி வருகின்றா
 ஆடிவரா வாராகி
ஆயுதங்கள் கையெடுத்துத்

தேடிவந்த நமக்கெல்லாம்
தெரிசனம் கொடுப்பதற்கு  - ஆடிவரா    **

எட்டுத் திசையும் நடுங்க – கண்டார்
எண்ண மெல்லாம் ஒடுங்க
கொட்ட மடக்கிட வட்டமடித்தெங்கும்

சட்டச் ச ட ச ட த் தாளம் முழக்கியே
ஆடிவரா வாராகி
ஆயுதங்கள் கையெடுத்துத்

தேடிவந்த நமக்கெல்லாம்
தெரிசனம் கொடுப்பதற்கு  - ஆடிவரா
 
வளைந்த பல்லால் கீறி-பகை
       வாட்டும் கோபம் மீறி
நெட்ட நெடுவுரு எட்டியெட்டிச் செல
       திட்டமிட்ட படி சீறி வருகிறா

ஆடிவரா வாராகி
ஆயுதங்கள் கையெடுத்துத்

தேடிவந்த நமக்கெல்லாம்
தெரிசனம் கொடுப்பதற்கு  - ஆடிவரா **

சாந்த மாக வரவேண்டும் தாயே – இந்தச்
சன்னிதிக்கு வரவேண்டும் நீயே
பாந்த மாக நாங்களெல்லாம்
பயப்படாதிருக்கும் படி
 ஆனந்தமாய் ஆடிவருவாயே – வந்தே
ஆசிகளை அள்ளித்  தருவாயே
ஆனந்தமே கொண்டுநாங்கள்-
அம்மா உனை வரவேற்போம்
சாந்த மாக வரவேண்டும் தாயே – இந்தச்
சன்னிதிக்கு வரவேண்டும் நீயே

ஆடிவரா வாராகி
ஆயுதங்கள் கையெடுத்துத்

தேடிவந்த நமக்கெல்லாம்
தெரிசனம் கொடுப்பதற்கு  -

ஆடிவரா ஆனந்த மாக வாரா
ஆசிகளை அள்ளித்தாரா
வான ந்த மான அம்மா
மண்ணிறங்கி வாரா வாரா

ஆடிவரா வாராகி
ஆனந்த மாக வரா

ஆடிவரா வாராகி
ஆன ந்த மாக வாரா!



No comments:

Post a Comment