எண்ணம் சிறக்க அருள்
எண்ணத்திலே எழும் சிந்தனைகள் ஆயிரம்
எழுதவோ
முடிவதில்லை
எண்ணத்திலே
எழும் சிந்தனை சிற்சில
எழுதிடும்
போது மற்றோர்
எண்ணத்திலே புகுந்தீர்த்திடும் இந்திர
ஜாலத்தைத்
தேறவில்லை
எங்கேயோ
மூலையில் தோன்றிடும் சிறுபொறி
என்னையே
தீய்க்கும் என்றே
எண்ணத்தைச் சொற்களில் வடிக்கிறேன் வடித்ததை
இங்குநான்
எழுதுகின்றேன்
என்னையே
என்சொலில் இழைக்கின்ற தன்மையை
என்றனுக்
கருளிஉள்ளத்
திண்ணையிலே எழும் சிந்தனை யாவையும்
சிறந்ததாய்
அமையும் வழியே
செய்யப்பனே,
நலம் பெய்யப்பனே உயர்
தெய்வமே
அய்யப்பனே!
No comments:
Post a Comment