Saturday, May 11, 2019

தேடி வருவாள் திரு


தேடி வருவாள் திரு

நேரிசை வெண்பா

வாழ்ந்திரு நெஞ்சில், மலர்மகள் பாதத்தில்
தாழ்ந்திரு, பின்னர்த்  தளராமல் - ஆழ்ந்திரு
நாடி விரும்பும் நலமெல்லாம் தானளிக்கத்
தேடி வருவாள் திரு.

அக்கிரமக் காரர்களை ஆர்த்தழிக்கப் போர்க்கோல
உக்கிரம் கொள்ளும் ஒருத்தியிங்கே அக்கரையாய்
பார்த்துப்பார்த் தன்பு பரிகின்றாள், அன்னையவள்
வார்த்தை கடந்திடும் வான்.

No comments:

Post a Comment