Saturday, May 11, 2019

கணபதி தூளி


கணபதி தூளி

உத்தரமாய்ச் சந்திரனும் திருமுடியில் நிற்க
     ஒருபாம்பு தூளியென அதினின்றும் தொங்க
பத்திரமாய்க் கணபதியும் தூளியிலி ருக்க,
     பார்வதியும் சிவனுமுடன் சேர்ந்துதா லாட்ட
மத்தளத்தை விட்டுவிட்டு நந்தியதைப் பார்க்க
      மலைகயிலை தன்மனத்தில் மகிழ்ச்சியினைச் சேர்க்க
இத்தகைய தூளியினை எங்கும்கண்ட துண்டோ
      இறைவியிடம் என்ன அது? சுவைக்கரும்புத் தண்டோ?
(This was drawn by my son by wood burning)


No comments:

Post a Comment