தாய்
எழுசீர் விருத்தம்
உற்றதாய் மற்றதாய்
உள்ளதாய் அல்லதாய் ஓமென்றே உறுகின்றதாய்
பெற்றதாய் பிறந்ததாய் பிறப்பிறப்
பற்றதாய் பேச்சதாய் பேச்சற்றதாய்
கற்பதாய் கற்றிடக் காண்பதாய்
கண்டபின் காட்சிகள் காண்கின்றதாய்
நிற்பதாய் இருப்பதாய் நடப்பதாய்
எழுவதாய் நிறைவதாய் ஆனவள் தாய்.
No comments:
Post a Comment