வாராகி
தோடகம்
சங்கராச்சாரியாருடைய சீடர் தோடகாச்சாரியார் ஒரு அருமையான
சந்தத்தில் தோடகாஷ்டகம் எழுதினார். அந்தச்
சந்தத்திற்கே தோடகம் என்று பெயர் வந்தது. ஒரு அடிக்கு எட்டுப் புளிமாக்களால் ஆன
கண்ணிகள்.
இதோ வாராகி தோடகம்
1
அருளே பொருளே அறிவே மறையே
அழகே அகமே அமைகின் றவளே
அரிதென் றெதுவும் உனதா யிலையே
திருவே னமுகி சரணம் சரணம்!
அழகே அகமே அமைகின் றவளே
அரிதென் றெதுவும் உனதா யிலையே
திருவே னமுகி சரணம் சரணம்!
2
அறிவே னெனவே உரைசெய் வதெலாம்
சிறிதும் அறிவே இலைநான் அறிவேன்
வறியேன் வழிநீ எனவே நினைவேன்
திருவே னமுகி சரணம் சரணம்!!
சிறிதும் அறிவே இலைநான் அறிவேன்
வறியேன் வழிநீ எனவே நினைவேன்
திருவே னமுகி சரணம் சரணம்!!
3
எதுநான் செயினும் அதுவுன் செயலே
எனுமோர் மனமே
தருவாய் இனிதே
கதிவே றிலையே மதிதா நிதிதா
திருவே னமுகி சரணம் சரணம்!
கதிவே றிலையே மதிதா நிதிதா
திருவே னமுகி சரணம் சரணம்!
4
கவியில் பொருளே தருவாய் வருவாய்
கருதக் கருதும் கணமே வருவாய்
அவையில் உரையே அழகாய்ச் சொரிவாய்
திருவே னமுகி சரணம் சரணம்!
கருதக் கருதும் கணமே வருவாய்
அவையில் உரையே அழகாய்ச் சொரிவாய்
திருவே னமுகி சரணம் சரணம்!
5 எளியேன் எனவே கருதி
அரிதை
விலகப் புரிதல் அழகோ அழகோ
அளியால் அரிதை எளிதாக் கிடுநீ
திருவே னமுகி சரணம் சரணம்!
விலகப் புரிதல் அழகோ அழகோ
அளியால் அரிதை எளிதாக் கிடுநீ
திருவே னமுகி சரணம் சரணம்!
6
நெறியில் விலகி நினைவிட் டிடினும்
சரியில் வழியில் தடைபோட் டிடுவாய்
பொறியில் படினும் விடுவித் திடுவாய்
பொருவே னமுகி சரணம் சரணம்!
சரியில் வழியில் தடைபோட் டிடுவாய்
பொறியில் படினும் விடுவித் திடுவாய்
பொருவே னமுகி சரணம் சரணம்!
7
பனியோ கனலோ வெயிலோ நிழலோ
முதலோ முடிவோ எதிலும் எதிலும்
நினைவே நினதாய் நிகழப் புரிவாய்
திருவே னமுகி சரணம் சரணம்!
முதலோ முடிவோ எதிலும் எதிலும்
நினைவே நினதாய் நிகழப் புரிவாய்
திருவே னமுகி சரணம் சரணம்!
8
எனதென் றுளவை உனதென் றறியும்
ஒருஞா னமதை உளமே தருவாய்
கனிவே, கருணைக் கடலே, நிறையே
திருவே னமுகி சரணம் சரணம்!
ஒருஞா னமதை உளமே தருவாய்
கனிவே, கருணைக் கடலே, நிறையே
திருவே னமுகி சரணம் சரணம்!
No comments:
Post a Comment