பொருதகர் சந்தம்
கீழ்க்காணும் பாடல் பொருதகர் சந்தம் என்னும் அமைப்பில் எழுதப்பட்டது.
அதாவது இரண்டு ஆட்டுக்கடா
ஒன்றோடொன்று மோதுகிறபோது முதலில் சற்றே முன்சென்று முன் பாய்ந்து மேலெழுந்து மோதி பிறகு
பின்வாங்கி முன்சென்று மோதிப் பின்வாங்கும் இச்சந்தமும் அப்படியே! இது கவியோகி வேதம் ஏற்பாடு செய்திருந்த கவியரங்கில்(கோடம்பாக்கம்
பரத்வாஜர் கோவிலில்) பாடப்பட்டது.
திருவருள் புரிகவே!
பொருதகர் சந்தம்- பதினாறு சீர் விருத்தம்
இசைபெரு தனமோங்கிடப் புகழோங்கிட
நிறுவிடும்
இனியவள் பதமலர் உளமதில் பதிந்திட
இழிவுறு பிணிபல படபடீரென அடிபேர்ந்திட
இதமருள் திருமகள் வரவுகள் பெருகவே!
அசைவுறு நெஞ்சேறிய சொல்லோவியம்
ஒலியுடன்
அணிபெறும் வகையிலே வெளியிடும் அருளெது?
அகவுணர் நரம்புகள் புடையார்ந்திட வெளிமோதிட
மிசையுறு மேலோங்கிய தேவாலயப்
பனிமலை
விரிசடைக் கடவுளின் இடம்பெறும் நாயகி
விதம்படு நடமதில் வெடிமோதிட இடையாடிட
வியனுல கனைத்துமே அரங்கெனல் ஆகுமே!
திசைபுகழ் சொர்ணாம்பிகை
அருளோங்கிடும் சபையிலே
திகழ்தமிழ் கவிதையின் அருமையைத் தெளிந்தவர்
தினவடு மனமதில் தெருளோங்கிடும் புகழோங்கிடச்
சிவனிடம் அமருமை திருவருள் புரிகவே!
No comments:
Post a Comment