ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி கும்மி
கும்மியடி பெண்ணே கும்மியடி - மிகக்
கோலாகலமாகக் கும்மியடி
அம்மை அகிலாண்ட ஈஸ்வரியாள் புகழ்
கோலாகலமாகக் கும்மியடி
அம்மை அகிலாண்ட ஈஸ்வரியாள் புகழ்
ஆனந்தமாய்ப் பாடி கும்மிடி
கோதண் ட ராமேசன் பாகத்தினாள் -பதம்
கூடுவோ ரைக்காக்கும் வேகத்தினாள்
ஏதும் இடரின்றிக் காத்திடுவாள்-நமக்(கு)
என்றும் நலம்கொண்டு
சேர்த்திடுவாள் - கும்மியடி
அன்று வணங்கிய ராமனுக்கு
வில்லை
ஐயன் அளித்தனன் வெல்கவென
இன்றைக்குக் கூறுவேன் வேண்டும் வெற்றியெனில்
என்றும் அவள்பெயர் சொல்கவென -
கும்மியடி
என்ன கொடுப்பதவளறிவாள் -அதை
என்று கொடுப்ப
தவளறிவாள்
அன்னதை எவ்விதம் எங்குக் கொடுப்பதென்(று)
அத்தனையும் அவள் தானறிவாள் -
கும்மியடி
அன்னையின் சொற்படி ஆக்கம் கொடுத்திட
அங்கே இருக்கும்
சனிபகவான்
இன்னல் கொடுக்காமல், ஏற்றுத் தொழுதிட
இன்னல் கொடுக்காமல், ஏற்றுத் தொழுதிட
என்றும் இதமாய் அருள்தருவான் - கும்மியடி
சித்திரை மாதம் முதல் தினத்தில் -வெயில்
சேர்ந்து
சிவன்மேல் விழுகிறதாம்
புத்தாண்டு வாழ்த்துப் பெறுகிறதாம்- அந்தப்
பூரிப்பில்
மேலும் தொழுகிறதாம் - கும்மியடி
அம்மை புகழினைப் பாடுங்கடி- மிக
ஆனந்த மாகவே
ஆடுங்கடி
செம்மைக்கைத் தாளங்கள் போடுங்கடி- கோயில்
சென்று தொழுதிடக் கூடுங்கடி - கும்மியடி
செம்மைக்கைத் தாளங்கள் போடுங்கடி- கோயில்
சென்று தொழுதிடக் கூடுங்கடி - கும்மியடி
No comments:
Post a Comment