Saturday, May 11, 2019

செல்வத்திருமகள்


செல்வத் திருமகள்     

கலிவிருத்தம்

செந்தாமரை மலர்மீதினில் சேர்ந்தேயமர் திருவே
நந்தாமணி வண்ணன்திரு  மார்பில் வளர் தேவி
உன்தாள் மலர் பணிந்தேன் நலம் ஒருங்கே தருவாயே
பொன்தா மிகப் புகழ்தா வளர் பொருள்தா அருள் தாயே!

எல்லாமிருந் தாலும்பொருள் இல்லாநிலை சேரின்
வல்லான் இவன் நல்லான் எனப் போற்றும் புகழ் எல்லாம்
செல்லாநிலையாகும் திரு மாலின்  அருள் தேவி
நல்லாய் உன தருட்பார்வையில் எல்லாம் உயர்வாகும்

தாயே அருள்வாயே விழிப்பார்வை தருவாயே
நீயே  வளம் யாவும் எனைச் சேரப் புரிவாயே
பாயே எனப் பாம்பில் துயில் கூடும் பதி ஆகம்
ஏயும் மலர் மாதே   பொருள் ஓங்கத் தருவாயே!

No comments:

Post a Comment