இரத்னகிரி முருகன்
கும்மி
கும்மியடி பெண்ணே கும்மியடி
மிகக்
கோலா கலமாகக் கும்மியடி
நம்பித் திருமணிக் குன்றம்
உறைந்திடும்
நாதனைப் பாடியே கும்மியடி கும்மியடி
குன்றிருக்கும் அருள் சீலனடி- நித்தம்
குன்றா எழில் கொண்ட கோலனடி
என்றும் நமைக்காக்கும் வேலனடி - இவன்
இரத்ன கிரிவளர் பாலனடி கும்மியடி
சூரப் பகையைத் தொலைத்தவண்டி- என்றும்
தூயவர் நெஞ்சில் நிலைத்தவண்டி
நாரணற் கன்பு மருகனடி- இவன்
நம்மைப் புரக்கும் முருகனடி கும்மியடி
நாவிற் கசைவைக் கொடுப்பவண்டி- இவன்
நம்மை நல் மார்க்கம் விடுப்பவண்டி
பூவை மலரப் புரிபவண்டி - இவன்
புள்ளி மயில்மேல் வருபவண்டி கும்மியடி
செந்தமிழ் பாடும் கவிஞனடி - இவன்
தீங்கவி கேட்கும் சுவைஞனடி
எந்த இடத்திலும் காப்பவண்டி- ஏதும்
இன்னல் வராமலே பார்ப்பவண்டி கும்மியடி
சித்தர் மனத்துறை முத்தனடி- நம்
சிந்தை கவர்ந்திடும் அத்தனடி
பத்திக் கிரங்கி வரமருள்வான் - நாம்
பாங்குடன் வாழும் தரமருள்வான் கும்மியடி
பால முருகனைப் போற்றுங்கடி - அவன்
பக்கம்வந் தேகுறை சாற்றுங்கடி
நீல மயிலேறி வந்திடுவான்- என்றும்
நிம்மதி வாழ்வினில் தந்திடுவான்! கும்மியடி
No comments:
Post a Comment