Friday, May 10, 2019

உனக்கென்ன, நீ சிரிப்பாய்..


உனக்கென்ன நீ சிரிப்பாய்... .. .. ..

பல்லவி

உனக்கென்ன நீ சிரிப்பாய் - முருகா
ஒவ்வோர் அசைவும் உன்றன் உத்தரவில் நடக்க   (உனக்கென்ன)

அனுபல்லவி

எனக்குள் அலைகள் எழ, எழுந்து புரண்டு விழ
எழிலார் கடற்கரையில், இருக்கிறாய் அன்பர் தொழ..   (உனக்கென்ன)

சரணம்
உன்விழி நோக்கதனை ஒருகோடியால் பகுத்தே
        ஒருபங்கால் எனைநோக்கி ஒருமுறை பாராயோ?
என்மொழி மந்திரம் எனவரம் தாராயோ?  
        என்சொலில் மற்றவர்க்கும் நன்மைகளைச் சேராயோ?   (உனக்கென்ன

No comments:

Post a Comment