Saturday, May 11, 2019

ஆகாதம்மா பிடிவாதம்


ஆகா தம்மா பிடிவாதம்

தொழுது கேட்டேன் உன்நெஞ்சம்
      துழவிப் பார்க்க இயலவில்லை
அழுது கேட்டேன்  அம்மாநீ
      அசைய வில்லை என்னிடத்தில்
பழுதாய் என்ன கண்டாய்நீ
      பழு திருந்தால் தவிர்ப்பாயோ?
எழுதும் போதில் பிரவாகம்
       இறங்கச் செய்வாய் கலைவாணி!   
முன்னைச் செயல்கள் மறந்தாயோ
      மூடன் என்றே நினைந்தாயோ
பின்னும் பின்னும் பேசிவந்த
       பிள்ளை இவனைத் துறந்தாயோ?
அன்னை பிள்ளை உறவுக்குள்
       ஆகா தம்மா பிடிவாதம்
மின்னல் வீச்சை அருள்வாயே
       வேகம் விவேகம் தருவாயே!
 

No comments:

Post a Comment