பாடு பாடு பாடு
பாடு பாடு பாடு
சக்தி புகழ் பாடு
ஆடி ஓடிப் பாடு தேவி
அம்மை புகழ் பாடு
கவிதையாக வருவாள்- பாடும்
கவிஞர்க்கருள்
புரிவாள்
புவியை ஓட்டிச் செல்வாள்- பக்தி
போற்றும்
நெஞ்சை வெல்வாள் பாடு
காளியம்மை கோயில் சென்ற
காளிதாசன்
நாவில
ஆளும் சொல்லை எழுத அவன்
ஆற்றல் பெற்றான் பாவில்
அம்மா வாசை இரவு –நிலா
ஆகாயத்தில் வரவு
தம்மைப் பாடும் பட்டர்- தமைத்
தாங்கிக் காத்த பரிவு
திருவானைக் கா கோயில் - தனில்
திகழ்தாம்பூலம் வாயில்
கருத்துடனே தந்தாள்- அவன்
காளமேகம்
ஆனான் பாடு
கூடல் வாழும் கண்ணி - அந்தக்
குருபரரை எண்ணி
மாடம் விட்டு வந்தாள் - மன்னன்
மடியின் பக்கம் நண்ணி
பாடச் சொல்லிக் கேட்டுக் – கொண்டாள்
பாரதியின் பாட்டு
ஆடு கின்றாள் அம்மை – அவள்
ஆதரிப்பாள் நம்மை
வேண்ட வேண்டத் தருவாள்- அவள்
விரைந்து காக்க வருவாள்
யாண்டும் அன்னை தோற்றம்- அவள்
அன்பு பெற்றால் ஏற்றம். பாடு
No comments:
Post a Comment