Friday, May 10, 2019

புவனேசி துதி


புவனேசி துதி

பன்னிருசீர் விருத்தம்

மொழிகடந்த சத்தியத்தை, பரம்பொருளை சக்தியெனும் மூலந் தன்னை
முன்னரிங்குத் தோன்றுவதாய்த் தோன்றாது தோன்றுகிற முத்தை, ஞானப்
பொழிநிலவாய் அருள்வெள்ளம் பாயச்சியிந்தப் புவனத்தைக் காக்கும் தெய்வப்
புத்தமுதை, புவனேசி  பூரணத்தை, ஓரெழுத்தில் பூக்கும் தேவை
எழிலுடைய ஆலயத்தில் குடியமர்ந்து நமைக்காக்கும் இறையை , தாயை
இயக்கங்கள் ஆள்பவளை, இதயத்தில் ஆழ்கின்ற பக்தி கண்டே
விழைவனவெல் லாம் கொடுக்கும்  வித்தகியை , வீரியளை வேண்டு கின்றோம்
மிகத்திடமும் நிம்மதியும் நல்வளமும் எந்நாளும் விளங்க வென்றே!

No comments:

Post a Comment