உன்னருள் வேண்டும் உடன்
நேரிசை வெண்பா
அம்மா புவனேசி ஆண்டாள்
நகரரசி
எம்மால் இனித்துயரம்
ஏலாது-
நம்பியுனை
நானுணர்ந்து வேண்டுகிறேன், நன்றாய்ப் பிணிதீர்ப்பாய்
ஈனம் புரியேன் இனி.
சொல்மறந்தேன் முன்சொன்ன
சூள்மறந்தேன் அம்மாநான்
பொல்லாங்கு செய்திங்கே
போக்கொழிந்தேன் வல்லாய்நீ
மன்னித்துக்
காத்திடுவாய் வாட்டும் பிணிதீர்ப்பாய்
உன்னருள் வேண்டும் உடன்.
No comments:
Post a Comment