Sunday, May 12, 2019

என்னைக் களிமண்ணாய் மாற்றிவிட்டேன்


2  என்னைக் களிமண்ணாய் மாற்றிவிட்டேன் -அதனில்
     ஏற்புநீர் ஊற்றி உன்பால் போட்டுவிட்டேன்

அன்னையே புவனேசீ நீயொரு கலையரசி
      என்னையென்ன செய்வதென்ன கொஞ்சமாய் நீயோசி

உன்கரத் தால்பிசைந்தே உருக்கொடுப்பாய் - அம்மா
  உன்னதம் உன்னதம் என்றெவரும்சொல
மின்னலை ஓடவிட்டே ஒளிகொடுப்பாய் - உன்றன்
  வித்தகம் காட்டியதில்  உயிர்கொடுப்பாய்

கையிலே குழந்தையாய் எனையெடுத்தே - அம்மா
  கவிதைப்பால் ஊட்டியே எனைவளர்த்தே
வையகம் வாழவே உனைப்பாடவே- தாயே
வரங்கொடுப்பாய் நல்ல வளம்கொடுப்பாய்  - அம்மா

No comments:

Post a Comment