Sunday, May 12, 2019

என்ன நடக்கிறது எனைச் சுற்றியே


1  என்ன நடக்கிறது எனைச் சுற்றியே - அம்மா
     எதுவும் தெரியவில்லை எனைப்பற்றியே

இன்னும் இரகசியமும் அவசியமா- அம்மா
  எனக்கு மட்டும் சொல்லிவிடு இரகசியமா

பெண்களிடம் இரகசியங்கள் தங்குவதில்லை -அந்தப்
   பேச்சு, பிழை ஆகிடுதல் அழகல்லவே
மண்ணகத்தில் வரவழைத்தாய் வளர்க்கின்றாய்- இங்கே
  வந்தவன்யார் என்பதையேன் மறைக்கின்றாய்?
என்னைநான் உணரும்படி ஒருவார்த்தை- அம்மா
  என்னிடத்தில் சொல்லிவிடு புவனேஸ்வரி
உன்னைநான் அறியவில்லை , என்பிழையா? - “நான்யார்”
  உண்மையை மறைப்பதுதான் உன்வழியா?
ஓரெழுத்தில் உறைபவளே, ஸ்ரீம் காரி - அதை
 உரைக்கத் தருகிறாய்நீ அருள்வாரி
நேரெழுத்தை என்மனத்தில் எழுதிவிடு - அதை
 நின்னிடத்தே அர்ப்பணிக்கும் மனதுகொடு -     தாயே


No comments:

Post a Comment