விஷ்ணு துர்கை சீவலப்பேரி
கும்மியடி பெண்ணே கும்மியடி மிகக்
கோலாகலமாகக் கும்மியடி
அம்மைநம் விஷ்ணுதுர்க் கைபதம் போற்றியே
ஆனந்த மாகவே கும்மியடி
காவல்தெய்வம் அவள் காத்திடுவாள்-நல்ல
கல்வி, புகழ், செல்வம் சேர்த்திடுவாள்
சீவலப் பேரி வதிந்தருள் செய்திடும்
தேவியைப் போற்றியே கும்மியடி.
சங்கரன் போற்றும் பரம்பொருளாம்- அவள்
தாளைப் பணிய வரும் அருளாம்
மங்கலம் யாவும் கொடுத்திடுவாள்- வரும்
வாதைகள் யாவும் தடுத்திடுவாள்
தாளைப் பணிய வரும் அருளாம்
மங்கலம் யாவும் கொடுத்திடுவாள்- வரும்
வாதைகள் யாவும் தடுத்திடுவாள்
ஞானம்
கொடுப்பாள், நலம் கொடுப்பாள்- பக்தி
நல்ல படி செய் வழிகொடுப்பாள்
வானம் அடைந்திடும் போதினில் மீண்டுமே
மண்ணில் பிறவா வரம் கொடுப்பாள்.
நல்ல படி செய் வழிகொடுப்பாள்
வானம் அடைந்திடும் போதினில் மீண்டுமே
மண்ணில் பிறவா வரம் கொடுப்பாள்.
No comments:
Post a Comment