Saturday, May 11, 2019

விடுவேனா நான்?


விடுவேனா நான்?

எனக்குள் ஏனோ அந்த முகம்
       எட்டி எட்டிப் பார்க்கிறது
நினைக்கும் பொழுது வருவதில்லை
       நெஞ்சுள் கனிந்து கண்ணீரால்
நனைக்கும் பொழுதும் வருவதில்லை
       நானே அழைத்தும் வருவதில்லை
தனித்தி ருக்கும் போதினிலே
       தானே எட்டிப் பார்க்கிறது.

படத்தை வரைந்து பார்ப்பமெனில்
       பாதி கூட நினைவில்லை.
விடு வே னாநான்? அன்றைக்கு
      விரல்நகத்தை வைத்தொருவன்
படத்தை முற்றும் வரைந்தானாம்
       பட்டி கையில்  தந்தானாம்
இடையில் தோன்றி மறையுமிதை
       என்றைக்கேனும் பிடித்திடுவேன்.

No comments:

Post a Comment