Saturday, May 11, 2019

நவராத்திரி


நவராத்திரி

அன்னை தேவி அருள்நவ ராத்திரி
    அண்டம் நோக ஆர்ப்பரித் தாடினோன்
தன்னை இன்னும் தாங்குதல் தீதெனத்
       தண்டம் செய்யச் சாடி எழுந்தனள்
கொன்று போட்டுக் குவலயம் காத்தனள்
       குற்றம் செய்வோன் கோமகன் ஆயினும்
அன்னை காட்டும் அறவழி பற்றுவோம்
      ஆல காலம் நாட்படப் பார்ப்பதோ?

No comments:

Post a Comment