Monday, May 13, 2019

காயத்ரி திருப்புகழ்- 1

காயத்ரி திருப்புகழ்- 1

உனையே துதித்தபடி ஒளிசேர் பதத்திணையை
       உளமே பதித்திடுமுன்                                   உறவாலே
       உலகே தனித்திவலை உளதாய் நினைத்திடுவன்
       உணர்வே கொடுத்தருளும்                        ஒளிநீயே
நினைவே, நினைத்தபடி நெகிழ்வே அளித்தருளி
       நிஜமே நினைக்கொணர                          வரந்தாராய்
       நெறியே , நெறிப்படென வழியே கொடுத்தருளும்
       நினையே தினத்தினமும்                         தொழுவேனே
கனியே கனிக்குளுள கனிவே கருத்திலுள
       கனலே எனக்குளெழு                                   கவியாலே
       கதியே எனத்தொழுது மறைமா முடிச்சிகரம்
       கனமாய் இருக்குமுனைப்                        பணிவேனே
னிவே றுனக்குநிக ரெனநா னெதைப்புகல
       எனவே புரச்சரணம்(நினைச் சரணம்)  அடைந்தேனே
       இனிநான் உனக்கடிமை எனைநீ புறத்திடுதல்
       எளிதோ எனக்குளுனை         அருள்வாயே!

No comments:

Post a Comment