Monday, May 13, 2019

சொர்க்கத்திடம் கிடைக்கும்



சொர்க்கத்திடம் கிடைக்கும்

இணையென்று சொல்லவே இயலாத மந்திர
      ஏற்றமே காயத்திரி
      எழுகின்ற ஜோதியாய் எந்நாளும் காண்பதாய்
      இருப்பது காயத்திரி
அணைகொள்ள முடியாத ஐம்பூதம் ஓர்நெறி
      ஆகிடும் காயத்திரி
      அணியாக வேதத்தின் மணியாக அடியவர்க்கு
      அருளாகும் காயத்திரி
புணையாக வாழ்வதன் பொருளாக நேர்ந்திடும்
      புனிதமும் காயத்திரி
      புரியாத காலத்தும் புரிந்திடத் தூண்டிடும்
      புண்ணியம் காயத்திரி
துணையாக, தொழும்பாக, சுடராகப் பொங்கிடும்
      ஜோதியே காயத்திரி
      ஜோதியைப் போற்றுவோம் அறிவினைத் தூண்டுவோம்
      சொர்க்கத் திடம் கிடைக்கும்!

No comments:

Post a Comment