தாயே தனந்தா
சமநிலைச் சிந்து
கற்பூரத் தட்டினிலே - காணிக்கைக்
காசு போடாவிடிலோ
அற்பமாய் எங்களையே - கோயில்
அர்ச்சகர் பார்க்கின்றார்
ஐம்பது காசுதந்தால் - பிச்சை
யாருக்கு வேண்டுமென்பான்
இம்மா உலகத்திலே - பணத்தின்
ஏற்றம் இமயமம்மா *
ஆனந்தக் களிப்பு
பட்டுப் புடவையும் உண்டா - ஒளி
பாய்ந்திடும் வைரப் பதக்கமும்
உண்டா
கட்டிக் கிட்டென்ன நான்
கண்டேன் - என்று
கட்டிய பெண்டாட்டி கத்திடு
கின்றாள்
பெட்டியைப் பெண்ணும் குடைவாள் - உள்ளே
பிடித்த திலையெனில் கோபம்
அடைவாள்
கட்டிப் பயல் எட்டிப் பார்ப்பான் - அட
சொல்லவே வேண்டாம் குதித்தவன்
ஆர்ப்பான்.
வாய்த்த இளமையும் வாட - இளம்
மங்கை, கணவன் பெறப்பொருள் தேட
காய்த்துக் கனியாமல் சாவார் - பலர்
காசின்றி வாழ்க்கையில் பித்தாகிப்
போவார்.
போதும் போதும் அம்மா தாயே - இந்தப்
பூமியில் வாழப் பொருள் தருவாயே
யாது பலன்பல கற்று - தாயே
ஆகையால் கொண்டேன் பணத்தின்மேல்
பற்று ?
எழுசீர் விருத்தம்
ஏ,ஏ, மனிதா, வாடா நீ என்று ஏலாதவரும் கூறாமல்
தீயே அனையோர் வாயில் விழுமோர்
தேரா நிலையே சாராமல்,
நாயேன் எனையே சேயே எனவே
நீயே பரிவாய் பாராயோ ?
தாயே தனந்தா, தாயே தனந்தா, தாயே தனந்தா,
தாதாதா *
செம்மா துளையே, செந்தாமரையே, தேனார்
அமுதே, செந்தேனே,
இம்மா வெளியே இல்லா நிலையே, எல்லாம் உனதாய் ஈன்றhயே,
சும்மா இருந்தே தாதா எனநான்
சொல்லாவிடினும் தரவேண்டும்,
அம்மா தனந்தா, அம்மா தனந்தா, அம்மா
தனந்தா, தாதாதா *
No comments:
Post a Comment