வாராகி
கீர்த்தனை
நெஞ்சில் தெளிவுகளை நீ தருவாயா?
பல்லவி
புதுப் புதுக்
கேள்விகள் எழுகின்றன—அம்மா
புதிராய் அவை மனம் விழுகின்றன தாயே
புதிராய் அவை மனம் விழுகின்றன தாயே
அனுபல்லவி
இதுவோ அதுவோ
இதுவதுவோ இல்லை
எதுவோ அதுவெனக் குழப்பிக் குழப்பியெனைப்— புதுபுதுக்
எதுவோ அதுவெனக் குழப்பிக் குழப்பியெனைப்— புதுபுதுக்
சரணம்
கனவிலே
வந்துநீ விடைதருவாய் எனக்
கற்றவர்
உற்றவர் காதிலே சொன்னார்
நினைவிலே
சுமந்தனன் வந்துவிட்டேன் இனி
நின்பரம், நின்வயம் நினைச்
சரணடைந்தேன் -புதுப்புதுக்
வார்த்தாளிநீ
வாராகி தாயே
வள்ளல்நீ வண்மையே நீ வருவாயா?
வள்ளல்நீ வண்மையே நீ வருவாயா?
நேர்த்திநீ, நெறிகள்நீ, நேசம்நீ தாயே
நெஞ்சில் தெளிவுகளை நீ தருவாயா? புதுப்புதுக்
நெஞ்சில் தெளிவுகளை நீ தருவாயா? புதுப்புதுக்
No comments:
Post a Comment