Saturday, May 11, 2019

தூதனின் திருப்பதமே!


தூதனின் திருப்பதமே

         தூதனின் திருப்பதமே-ராம
         தூதனின் திருப்பதமே-மனமே
         துதித்தெழு நீதினமே-இதமே   (தூதனின்)

        ஆதவனிடம் கற்றான்
        யாவையும் வரப்பெற்றான்
        மாதவம் தனில் உற்றான்
        மாசெதுவும் அற்றான்

        கல்வி அவன் தருவான்
        கனிவுடனே வருவான்
        கதிதரும் செல்வங்கள்
        கனமழையாய்ச் சொரிவான்    (தூதனின்)

        உள்ளதெல்லாம் அவன் உபகாரம்-அவன்
        உள்ளிருக்கப் போகும் அகங்காரம்
        வள்ளலுடன் வந்த அவதாரம்-இந்த
        வாழ்வினுக் கவன்தானே ஆதாரம்  (தூதனின்)

        ராம்நகரில் அவனின் விஸ்வரூபம்-அவன்
        நம்மிடம் கொள்ளுகிறான் அனுதாபம்
        நாம் பணிந்தால் கிட்டுவது வெகுலாபம்-அந்த
        ராமன் அவன் நெஞ்சில் ஒளிர்தீபம்  (தூதனின்)

        மருந்தைக்  கொணர்ந்தவன் மாமேதை- நம்
        மாருதிக் கருளினள் தாய்சீதை
        விருந்தில் இராமனுடன் ஓரிலையில்- உண்ட
        வீரன் அகற்றிடுவான் நம் வாதை   (தூதனின்)                       

No comments:

Post a Comment