கொடுக்கக் கொடுக்கக் கொள்கலம் நிறையும்
ஒருதிரை ஒருதிரை ஒருதிரை
என்றே
ஒவ்வொன்றாக விலக்குகிறாய்
ஒப்படைக்கின்றேன் பத்திரம்
என்றே
ஒருபரம் தந்தே கலக்குகிறாய்
வருதிரை நெளிகிற
பொழுதிலே தந்த
வரங்களை வாரிப் பதுக்குகிறேன்
வகைவகை வகையெனப் பிரித்தவை
சொத்தாய்
மனத்தறை கட்டி ஒதுக்குகிறேன்
எடுத்தவை கொடுத்திடும் இங்கிதம்
இன்றி
இழுத்தொரு பூட்டுப் போடுகிறேன்
இனியுனக் கெதற்குநான் கொடுப்பதென்று
அன்னாய்
இழுத்தெதிர் திரைகள் மூடுகிறாய்
கொடுத்திடக் கொடுத்திடக்
குறைந்திடும் ஒன்றா
கொடுத்தனை, வாணி!, திறந்துவிட்டேன்
கொள்கலம் நிறைந்திடக் கொள்ளென
அள்ளிக்
கொடுக்கிறாய் மீண்டும் பிறந்துவிட்டேன்.
No comments:
Post a Comment