இன்று மறந்தனையோ?
சிந்து
இன்று மறந்தனையோ - அடி
என்னைத் துறந்தனையோ?
அன்று நினைத்தவுடன்
ஆகம் நிறைத்தவளே
’
இன்று மறந்தனையோ-
அடி
என்னைத் துறந்தனையோ
பாலத்தடியினிலே
பாவி எனைத்தழுவி
நாலு கவிதைகளை
நல்கி உயிர்த்தவளே
ஒன்றும் நினைவிலையோ?-அந்த
ஊற்றம் இனியிலையோ
என்றும் உனதுயிர்நான்
என்று மொழிந்தவளே
ஒன்றும் நினைவிலையோ-அந்த
ஊற்றம் இனியிலையோ
ஆல மரநிழலில்
ஆதிக் கதையெழுதி
நீல விசும்பளந்து
நெஞ்சு கலந்தவளே
பெண்ணே அதுகனவோ- அடி
பேசியதும் புனைவோ
கண்ணுள் ஒளியெனவே
காட்சி கொடுத்தவளே
பெண்ணே அதுகனவோ-அடி
பேசியதும்
புனைவோ?
தூங்க விடாதெனையே
தொல்லைச் சுகங்கொடுத்து
நீங்கல் எனும்பதத்தை
நெம்பித் தொலைத்தவளே
ஓடி ஒளிந்தனையோ?-அடி
ஊக்கம் தளர்ந்தனையோ
ஏடு தனைநிறைக்கும்
எண்ணக் களஞ்சியமே
ஓடி
ஒளிந்தனையோ-அடி
ஊக்கம் தளர்ந்தனையோ?
எண்ணம் இளமையடி
என்றும் வளமையடி
கண்ணிலே ஈரமடி
காலச்சஞ் சாரமடி
No comments:
Post a Comment