கலைமகள் பஞ்சகம்-1
கலிவிருத்தம்
நிலையே, நிதியே ,நிகழ்வே,
நிறைவே
இலையே இணையே எனநிற் பவளே!
உலையா இசையே, உனைநான் தொழுதேன்
கலைமா மகளே கழல்தந் தருளே!
இசைநீ, எழில்நீ , இதம்நீ.
இயலே
விசைநீ, வினைநீ, விதைநீ
,விளைவே
பசைநீ, பதம்நீ, பரம்நீ,
பரிவே
திசைநீ, தினம்நீ, தெளிவே அருளே!
கவிநீ, கலைநீ, கருதும் கனிவே
புவிநீ, புகழ்நீ, புனிதப் பொருளே
தவம்நீ, தனிநீ, தமிழின் தகவே
நவம்நீ, நயம்நீ நலமே அருளே
இதுதான் எனநான் எனும்போ
தினிலே
அதுவாய் அமைவாய் அமர்வாய்
அமையே!
எதுவாய் இவனை இனிநீ செயினும்
துதிவாய் வரவே சொலுவாய்
சுகமே!
விதியே, விதியின் விதியே, விரிவே
மதியே மரையில் மலரும் வடிவே
பதமே பணியும் பணிதா பரமே
உதவும் உதவி உனதா குகவே!
No comments:
Post a Comment