Friday, May 10, 2019


யாதுதான் ஈர்த்ததுண்டு?

அறுசீர் விருத்தம்

வானெமை ஈர்த்த துண்டு
        மறிகடல் ஈர்த்த துண்டு
யானையைப் போலே வேறே
      யாதுதான் ஈர்த்த துண்டு?
ஆனையாய் என்றும் ஈர்க்கும்
        அய்யனே, மறையின் மூர்த்தி
நானெதும் கேளாப் போதும்
        நல்லருள் செய்ய வேண்டும்

பாத்திரம் இவனென் றேநீ
        பாவித்துக் காக்க வேண்டும்
பாத்திறம் மேலும் தந்தே
        பக்குவப் படுத்த வேண்டும்
தோத்திரம் செய்வதற்குச்
        சொற்களைத் தந்து, நீயே
ஏத்திடும் அறிவும் நல்கி
        எனக்கருள் செய்ய வேண்டும்


No comments:

Post a Comment