தொந்தியப்பன்
அறுசீர் விருத்தம்
தொந்தியப்பன், தீவினைகள் தொலைக்குமப்பன் பாரதத்துச் சொல்ப
தித்த
தந்தியப்பன், ஓங்காரச் சக்தியப்பன், தெருவெல்லாம் தானி ருக்கும்
சந்தியப்பன், எளிவந்து சாருமப்பன், பக்தர் தம் சிந்தை தோயும்
புந்தியப்பன், பூரணப்பன், புகலப்பன்,
புனிதத்தாள் போற்றி போற்றி
தும்பிக்கை ஆழ்வானாய் வைணவர்கள் தோத்தரிப்பார்,
சூழும் யாவும்
தம்பிக்க வைக்காமல் வெற்றிபெற
வேண்டியருள் தாள்பி டிப்பார்
நம்பிக்கை வைத்தவர்கள் நலிவுற்றுப்
போவதில்லை, நாடி னோர்க்குக்
கும்பிக்குச் சோறளிக்கும்
குறள் தெய்வம், கேட்டதெல்லாம்
கொடுக்கும் தெய்வம்.
சூரியனின் தேரச்சுத் தூளாக, சிவனாரோ தொடங்கி விட்ட
போரிடத்தே செலுமுன்னே புதுமுறைத் தேர் பொடியாக, பூவில்
வந்தோன்
காரியத்தைச் செயமறந்து கண்டபடி
படைத்துவிட, காளி மாதா
யாரிடத்தே சொல்வமென அவலமுற
ஆனைமுகன் அருள் நினைந்தார்
No comments:
Post a Comment