எண்ணும் கிழமையும்
பதினான்கு சீர் கழிநெடிலடி
இரட்டை ஆசிரியவிருத்தம்
ஒரு தந்தம் இருதிணை மும்மதம்
நால்வாயோ(டு)
ஓங்கைந்து கரங்கொண்டவன்
ஒப்பரிய ஆறுதலை ஏழுதலை முறையெட்டும்
ஒய்யாரம் தருகின்றவன்
தெருவெங்கும் நவமாக அருள்பொங்கும்
பதியாகத்
தேடியே வருகின்றவன்
செழித்தோங்கும் இன்பத்தைக் கொழித்தோங்கச் செய்பவன்
சித்தாந்தம் ஆகின்றவன்
தெருள்கூடும் ஞாயிறு திங்கள்
அக்கினியெனத்
திகழ் மூன்று கண்கொண்டவன்
தேடரும் மறைச் செவ்வாய் அற்புதன் ஞானமெனும்
தேனருவியாழ நதியான்
அருள்வெள்ளியங்கிரி சிறுபிள்ளை
சனியினால்
அற்றதலை மற்றுடையவன்
ஆனைமுகன் கணபதி ஞானவிழி நாயகன்
ஆதாரமாய்க் காக்கவே
No comments:
Post a Comment