அடடாவோ அடடா!
அண்ட பகிரண்டங்கள்
ஆக்குகிறாள் தேவி
அத்தனையும் மோதாமல் ஓட்டுகிறாள் மேவி
விண்டுரைக்க மாட்டாத விண்வெளியும் கோலம்
மேவுமொரு நியதியிலே சுற்றுகிற ஞாலம்
கண்டுரைக்க கூடாத காட்சிகளின் விந்தை
காலமெலாம் ஓர்நியதி காட்டுங்கோள் மந்தை
அண்டுகிற யாவையுமே தானாகி நிற்பாள்
ஆதிபரா சக்தியடா அடடாவோ அடடா!
அத்தனையும் மோதாமல் ஓட்டுகிறாள் மேவி
விண்டுரைக்க மாட்டாத விண்வெளியும் கோலம்
மேவுமொரு நியதியிலே சுற்றுகிற ஞாலம்
கண்டுரைக்க கூடாத காட்சிகளின் விந்தை
காலமெலாம் ஓர்நியதி காட்டுங்கோள் மந்தை
அண்டுகிற யாவையுமே தானாகி நிற்பாள்
ஆதிபரா சக்தியடா அடடாவோ அடடா!
யுகமென்றும்
ஆண்டென்றும் நாளென்றும் கூறி
ஓடுகின்ற காலத்தைக் கணிக்கின்றோம் இந்தச்
ஜகமென்றும் விண்ணென்றும், பாதாளம் என்றும்
சாரும் இடம் வியப்பென்றும் சாற்றுகின்றோம் சேரும்
முகமென்றும், கையென்றும் காலென்றும் தேக
முறைமையினைக் கூறுகின்றோம், யாவுமென நின்றும்
அகமென்னும் ஒன்றுக்குள் ஆடுகிறாள் தேவி

வசந்தத்தில் பூமலரும் , மாருதமும் வீசும்
மாங்குயிலோ தன்குரலில் தான் மயங்கி நிற்கும்
கசந்துவரும் வேம்பதுவும் கண்விழித்துக் கொள்ளும்
காற்றெல்லாம் மணம்பரவும், காதலிசை மலரும்
இசைந்துவரும் ஒவ்வொன்றும் இரண்டிரண்டாய்த் தோன்றும்
எண்ணமெலாம் களிகொள்ளும் , ஓங்குமெழில் வண்ணம்
அசைந்துவரும் வசந்தத்தில் அவளாடி நிற்பாள்

மாரிவரும், எங்கெங்கும் வாழ்வுவரும், தோற்றம்
மாறிவரும், மண்மணக்கும் பசுமையெழில் கொஞ்சும்
ஏரிகுளம் நீர்நிரம்பும் , போராடும் அலைகள்
எங்கெங்கும் அழகுமகள் புனைகின்ற கலைகள்
நீரிவரும், தெருவெல்லாம் ஆறிவரும், , வாய்க்கால்
நிரம்பிவரும், தவளைகளின் கேள்விபதில் மீறும்
யாரெவரும் வாழ்த்துகிற அக்கோலம் கொள்வாள்

புல்லிதழில் முத்தங்கள்
பூத்துவரும், ஞாலம்
புகையாடை போர்த்தெழிலைக் காத்துவரும் காலம்
தொல்லைதரும் குளிர்நெருப்புச் சுடுகின்ற போது
சூரியனைத் துணைவேண்டி அழைப்போமப் போது
கல்நரம்பும் தானாகச் சுதிமீட்டித் துள்ளும்
கால்கைகளால் உடம்பு தனைக் காத்துக் கொள்ளும்
அல்லல்தரு வாள்போலே அக்காலை நடிப்பாள்
ஆதிபராசக்தியடா அடடாவோ அடடா!

வெம்மை வரும்
எங்கெங்கும் வெண்மைவரும் கோடை
வெய்யவனின் பரிசாகும் வேர்வையெனும் ஆடை
செம்மைபெறும் பசிய இலை, தெருவெல்லாம் வெள்ளம்
சேர்ந்ததுபோல் கானல்நீர் , திகைத்துவரும் உள்ளம்
வெம்பிவிழும் இளம்பிஞ்சு, விரிவெல்லாம் வீறல்
வேகாத வெயிலம்பு விளைத்திட்ட கீறல்
அம்மையவள் ஆங்காரி , மாகாளி , வீரி

வாவென்று காகங்கள்
வரவேற்கும் காலை
வாயிலிருந் தாழ்நீக்கி வழியாக்கும் வேலை
ஓவென்றும் ஓமென்றும் உருவாகும் கீதம்
ஒருநாளின் வரவுக்கே உருவாக்கும் கீதம்
பாவொன்று வெண்பாவின் பரப்புக்குள் தோன்றி
பாய்ந்துவரும் செங்கதிரோன் கிரணங்கள் ஊன்றி
ஆவென்று வியக்கின்ற அக்கோலம் கொள்வாள்
ஆதிபரா சக்தியடா அடடாவோ அடடா!
செந்தழலின் தண்குழம்பில் செம்பவளம் அரைத்து,
செம்மையென உள்ளதெலாம் சேர்த்ததிலே கரைத்து
சிந்தையெழு கற்பனையில் சித்திரங்கள் ஆக்கி,
செய்யவொளி மேகத்தில் செம்பொன்கரை தேக்கி
வந்துவிழும் சித்திரத்தில் வண்ணம்பல பெய்து
மாறிமாறி மாறிவரும் மாற்றங்களைச் செய்து
அந்தியெழு நாடகத்தில் அவள்கவிதை செய்வாள்

ஊரடங்கும் ஓசைகளின்
உணர்வடங்கும் இரவு
ஒளிவெள்ளம் மறைகொள்ள இருளாட்சி வரவு
சீருயரும் வெண்மதியின் சிலகால மீட்சி
தேவமகன் மன்மதனின் சிலகால மீட்சி
கூருடைய கவலைகளின் சிறு ஒத்திவைப்பு
குவலயத்தை வாழ்விக்க இரவோர் படைப்பு
ஆரமுதாய் அவ்விரவில் அருளாட்சி செய்வாள்
ஆதிபரா சக்தியடா அடடாவோ அடடா!
ஓங்கிவரும் ஓர்செய்தி உரைத்திடவே எண்ணி
ஒருகணத்தின் பலபகுப்பில் உணர்கின்ற போதே
ஆங்கதுவும் செய்தியென நாவசைப்பில் ஏகும்
அற்புதத்தைச் செய்வதுவும் யார்தயவால் ஆகும்
ஈங்கிதுதான் இப்படித்தான் இன்னபடி ஆகும்
என்றெல்லாம் கணிக்கின்ற மிகப்பெரிய சக்தி
ஆங்காரி ஓங்காரி சாமுண்டி காளி

No comments:
Post a Comment