அருள்வாயே!
அழகுகளை ரசிக்க அறுசுவைகள் சுவைக்க அற்றவுடன் பசிக்க அருள்வேண்டும்
எழுதுவதை வியக்க,
எழுதியபின் சுவைக்க இன்னொருவர் படிக்கும் இதம்வேண்டும்
விழையுநலம் கிடைக்க வேண்டியவை நிலைக்க வித்தகங்கள் சிறக்க வரம்வேண்டும்
பழகுவதில் ஒழுக்கம், பண்புகளில் விருப்பம், பார்புகழும் விழுப்பம் அருள்வாயே!
No comments:
Post a Comment