Monday, May 13, 2019

இதுதானோ?


13-5-2005.
கயிலாய யாத்திரையின் போது என் மகனைப் பரிக்கிரமாச் செல்ல அனுப்பிய இட்த்திலிருந்து மிகச் சிறப்பாக்க் கயிலை மலை தரிசனம் கிடைத்த து. அதைக் கண்ட மகிழ்ச்சியில் நாள்காட்டியில் எழுதியது

“இதுதானோ கைலை? இதுதானோ ஈசன்
விதமாடும் நாட்டிய மேடை ?- இதுதானோ
ஏதேனும் ஒப்பியம்ப  ஏலா வகையினிலே
மாதேவன் ஆடும் மலை?

இதுதானோ கைலைமலை, இதுதானோ சிவன்வீடு?
இதுதானோ பார்வதி திருமணம் நடந்தயிடம்
இதுதானோ மாதேவன் நடமாடும் ஆடரங்கம்?
இதுதானோ பேரண்டம் இயங்குகிற அச்சாணி!


No comments:

Post a Comment