காளி சக்தி
ஓங்குகிற ஓர்செய்தி உரைத்திடவே ஒருகணத்தின் பலபகுப்பில் உணரும் போதே
ஆங்கதுவும் செய்தியென அவிழ்கின்ற மாபெரிய அற்புதத்தை யார்செய் கின்றார்?
ஈங்கிதுதான் இப்படித்தான் இன்னபடி ஆகுமென இயற்றுகிறாள் காளி சக்தி
நீங்குவதை நிறுத்துவதும் நிறுத்துவதை நீக்குவதும் நெறிகாக்கும் அன்னை யன்றோ!
No comments:
Post a Comment