Monday, May 13, 2019

மீனாட்சி


காய் விளம் விளம் விளம் விளம் விளம் காய்

எய்திடும்தன் அம்பினால் என்னரும் நாள்சுமந் தேகுமிக் காலமொவ் வொன்றாக,
செய்தபல செயல்களை சிந்தையில் கணிக்கிறேன், சிறப்பெதும் முன்வரக் காணவில்லை
கொய்திடும்அந் நாளிலே கொஞ்சமும் குலைவுறாக் குன்றென நிமிர்கிற அருள்பெறவே
செய்யதமிழ்க் கூடலின் தேவிமீ னாட்சியின் திருப்பதம் போற்றியே பாடுகின்றேன்.

இலந்தை
12-11-2007

No comments:

Post a Comment