Friday, May 10, 2019

ஏனழைத்தாய்


ஏனழைத்தாய்?

பதினான்கு சீர் விருத்தம்

உன்செயல் வாழ்வினில் ஒவ்வொன்றும் ஆம், எனை
      ஓங்கிடச் செய்வதும்நீ
      உனக்கென்ன செய்தனன், என்றனைத் தனியாயிவ்
      ஊருக்கும் ஏனழைத்தாய்
வன்செயல் செய்வதும் முறையதோ, சொற்படி
        வந்தனன் காக்க வேண்டும்
       வரலாறு காணாத வகையிலே எனக்கும்நீ
       மாண்புகழ் சேர்க்கவேண்டும்
என்செயல் ஒன்றிலை, எல்லாமே நின்பரம்
       என்குறை அறிவைநீயே
       எனக்கெது தேவையென் றவைநன்கு தரவேண்டும்
         ஏற்றங்கள் கூட்ட வேண்டும்
 அன்பெனும் ஒன்றிலே அகப்படும் தெய்வமே
       ஆனைமுகம் கொண்டவா!
       ஆகும்நற் செயல்களின் அதிபதி, விநாயகா
        ஐங்கரா, கணநாயகா!

No comments:

Post a Comment