காரணமான பூரணனே
காரணமான பூரணனே
காரிய மாற்றும் வாரணனே
பாடிட வார்த்தை போடுகிறாய்
வீடும் வெளியும் கூடுகிறாய்
காரிய மாற்றும் வாரணனே
பாடிட வார்த்தை போடுகிறாய்
வீடும் வெளியும் கூடுகிறாய்
மோதகம் உண்ணும் போதகனே
சாதகன் நெஞ்சில் ஆதவனே
சிறியதில் இன்னும் சிறியவனே
நிறைவைக் கடந்து நிறைபவனே
சாதகன் நெஞ்சில் ஆதவனே
சிறியதில் இன்னும் சிறியவனே
நிறைவைக் கடந்து நிறைபவனே
எண்ணம் விளைக்கும்
விண்ணவனே
விண்ணைக் கொணரும் புண்ணியனே
கணபதியேநற் குணபதியே
பணிவுடன் உன்னை வணங்குகிறேன்
விண்ணைக் கொணரும் புண்ணியனே
கணபதியேநற் குணபதியே
பணிவுடன் உன்னை வணங்குகிறேன்
No comments:
Post a Comment