பிள்ளையார் எத்தனை பிள்ளையாரோ
எண்சீர் விருத்தம்
நவராத்ரி கொலுபார்க்க வீடு
வீடாய்
நான்சென்று பார்த்துவந்தேன்,
அடடா எங்கும்
எவராதிக் கம்மிகவும் உள்ள
தென்றால்
எம்தேவன் கணபதிக்கே முதன்மை என்பேன்
எவரெந்த வடிவவர்க்குக் கொடுப்ப
தற்கே
எண்ணிடினும் அதற்கேற்ப இடம் கொடுத்தே
நவமாகப் பலவடிவம் ஏற்றுக்
கொண்டே
நமக்கருளைக் காட்சிகளால் நல்கு கின்றார்
தூங்குகின்றார் ஓர்பக்கம், கிரிக்கெட் ஆடச்
சூழ்கின்றார் மறுபக்கம். அடிக்க மட்டை
தாங்கிகுகிறார் ஓர்பக்கம்,, முனைந்து நின்றே
சரிதவறு சொல்கின்ற “அம்பைர்” ஆவார்
பாங்குடனே பெண்வேடம் போட்டுக்
கொள்வார்
பரிவோடு வைத்தியமும் பார்ப்பார், போனில்
ஆங்கவரும் பேசிடுவார், ஆட்டம் போட்டே
ஆர்த்திடுவார், அப்பாவியாக நிற்பார்
நடுவினிலே குழந்தையெனப்
படுத்திருப்பார்
நல்லபடி அவர் தூங்க, பிள்ளை
யார்கள்
தடபுடலாய் பாட்டுக்கச் சேரிசெய்வார்
தலைப்பாகை கட்டிக்கை இடுப்பில் ஊன்றி
படுத்திருப்பார் சாய்வாக, கேரம் போர்டில்
பக்குவமாய் ஆடிடுவார், செல்போன்
காதில்
அடுத்திருக்க, கணினியினை இயக்கிப் பார்ப்பார்
அவருடைய விளையாட்டும் ஒன்றி ரண்டா?
காதிரண்டைத் தாம்பொத்தி, வாயைப் பொத்தி
கண்ணிரண்டைத் தாம்பொத்தி,
மூவராகப்
போதனைகள் செய்திடுவார், மனைவி யர்கள்
புடைசுழ வீற்றிருப்பார் ஓர்பக்கத்தில்,
ஏதுமறி யாப்பிரம்மச் சாரி
யாக
இருப்பாரங் கோரத்தில்,
முருக னுக்கே
ஆதரவாய் வள்ளியினை வெருட்டு
தற்கு,
யானையெனத் துதிக்கையினை உயர்த்தி
நிற்பார்.
அனுமனுடன் தன்னுடலம் பகிர்ந்து
கொண்டே
ஆத்யந்தப் பிரபுவென நின்றி
ருப்பார்
வினயமுடன் பெண்வேடம் போட்டே
ஓர்பால்
ஸ்ரீவித்யா கணபதியாய் கோலம் கொள்வார்
கனிவுடனே “டுண்டி கண பதியென் றாவார்
கைலாயம் ஔவையினை தூக்கிச் செல்வார்
கனிபெறவே தாய்தந்தை தம்மைச்
சுற்றி
காட்டிடுவார் தந்திரத்தை,
கனியை வெல்வார்
அகத்தியரின் கமண்டலத்தைக்
கவிழ்த்து விட்டே
அகண்டகா வேரியினை ஓட வைப்பார்
தகவுடனே தாய் குளிக்கக்
காவல் காக்கும்
தனயனென நிற்கையிலே தலையி ழக்க
மிகவிரைவாய் யானைமுகம் அளிக்கும்
காட்சி
விதவிதமாய்ப் பதினாறு வடிவம்
தாங்கி
அகத்தினிலும் வெளியினிலும்
காட்சி நல்கும்
ஆனைமுகன் வடிவங்கள் என்ன சொல்வேன்!

No comments:
Post a Comment