செம்மொழித் தெய்வம்
பதினான்கு சீர் விருத்தம்
எம்மொழித் தெய்வமே, செம்மொழி நாயகா
எங்களின் ஒலிநாதனே
எத்தனை துன்பங்கள் எத்தின எத்தின
எத்தியே அழிக்கவென்றே
நம்பியே தேவர்கள் நாடியே
வேண்டிட
நம்பி, நீ தெம்பளித்தாய்
நாசமே செய்தவன் நாசமே ஆகிட
நல்லருள் நீபுரிந்தாய்
பம்பியே மேலெழப் பார்த்திடும்
மாகடல்
பக்கமே கோயில் கொண்டாய்
பகழியின் பாடலில் அகமகிழ்ந் திடுகிற
பாலசுப் ரமண்யனே
அம்மவோ உன்னருள் அழகினைக்
கண்டிட
ஆயிரம் கண்வேண்டுமே
அலைகடல் கவிதையை அனுதினம் ரசிக்கின்ற
அறுமுகா , காக்க காக்க!
No comments:
Post a Comment