வளமே உறும் நம் வசம்
நேரிசை வெண்பா
இதுவோ அதுவோ எதுவோ எனவே
துதிவே றிலாது தொழவே – அதுவே
தருவான் முருகன் தனிவே
லரசன்
வருவான் மனங்கொள் வகை
வகையுளி இன்றி வதியும்
கவியாய்
தகவளி வேலனின் தாளை-
அகமே
கொளவே வருமே குறையா நலமே
வளமே உறும்நம் வசம்
No comments:
Post a Comment